ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

 
nehru

ஈரோட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 133-வது பிறந்த நாள் விழா இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு  ஈ.வி.கே.எஸ் சம்பத் சாலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா கலந்து கொண்டு, காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார்.

thirumagan evr

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மண்டல தலைவர்கள் அல்டிமேட் தினேஷ், விஜயபாஸ்கர், சசிகுமார், மாநில சிறுபான்மைத் துறை ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி, மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவர் குளம் எம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் விஎம்கே செந்தில் ராஜா, தீபா,  துணைத் தலைவர்கள் கோதண்டபாணி, வெங்கடாசலம், அம்மன் மாதேஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, பொது செயலாளர்கள் ஏசி. சாகுல் ஹமீத், கராத்தே யூசுப், ஆறுமுகம், வி.கே, சச்சிதானந்தம், மாவட்ட செயலாளர்கள் பாலதண்டாயுதம், கே.ஜே.டிட்டோ, சிவக்குமார், சதீஸ், ஊடக பிரிவு முகமது அர்சத், இளைஞர் காங்கிரஸ் செந்தூர் ராஜகோபால், எஸ் சி பிரிவு சின்னசாமி,  சேவா தளம் முகமது யூசுப், சிறுபான்மை சூர்யா சித்திக், துணைத் தலைவர் கேஎன் பாஷா, ஈ.எம். சிராஜுதீன், என்.சி,டபிள்யூ.சி கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ்  நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.