புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு - 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
jallikattu

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வடமலாப்பூர் பிடாரி அம்மன், கருப்பர் கோவில் திருவிழாவை ஒட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அதன்படி, இன்றைய தினம் வடமலப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, சிவங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டி துவங்கும் முன்பாக வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 vada
தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. வாடிசாலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, இளைஞர்கள் தீரமுடன் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகளை களத்தில் நின்று விளையாடி வீரர்களை அச்சுறுத்தி சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம், பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.