வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு!

 
collector ariyalur

அரியலூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தமிழக அரசின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் வாயிலாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட இணைப்பு பாலமாக www.tnprivatejobs.gov.in என்ற இணையதளம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக பிரத்யேகமாக உருவாக்கப்பப்பட்டுள்ளது.

tnjobs

மேற்படி இணையதளத்தில் தங்களது நிறுவனங்கள் சார்ந்த விவரங்களை பதிவு செய்தும், மேலும் விவரங்களுக்கு deo.alr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ (அல்லது) 04329 - 228641 என்ற அலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாய்ப்பினை, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.