விருதுநகரில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 9 நாட்கள் நடைபெறும் - ஆட்சியர் தகவல்!

 
virudhunagar virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவி பணிக்கான நேர்காணல் மீள வரும் 28ஆம் தேதி முதல் மே 9 வரை 9 நாட்கள் நடைபெறும் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  கால்நடை பராமரிப்புத்துறையில்  ஒமிக்ரான் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் மீள வரும் 28ஆம் தேதி முற்பகல் முதல் மே 9ஆம் தேதி 9 நாட்களுக்கு ( அரசு விடுமுறை நாட்கள் தவிர மே 1, மே 3, மே 8) தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2 மணி முதல் காலை 5.30 மணி வரையும் விருதுநகர் மருத்துவக்கல்லுரின எதிர்புறம் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.

virudhunagar ttn

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு  அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்துகொள்வதற்கான புதிய நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் நேர்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நேர்முக அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியல் விருதுநகர் மாவட்ட வலைத்தளமான https://virudhunagar.nic.in/ ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை  தகுந்த ஆதாரங்களுடன் அலுவலக நேரத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். புதிய நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.