ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

 
cong

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்த நாளையொட்டி, நேற்று  ஈரோட்டில் அவரது உருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்செல்வம் தலைமையில் கட்சியினர் இந்திரா காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளக்கு  இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் அல்டிமேட் தினேஷ், சசிகுமார், எச்.எம் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

congress

இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் கட்சியினர் இந்திரா காந்தியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம். பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், முத்துக்குமார், வட்டாரத் தலைவர்கள் கொடுமுடி மேற்கு முருகேஷ், மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.