ஈரோட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவக்கம் ; 7.47 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்!

 
erode

ஈரோடு மாவட்டத்தில் 7.47 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக, ஆட்சியர் கிஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதனையொட்டி, ஈரோட்டில் கொல்லம்பாளையம் வண்டிக்காரன் பேட்டை பகுதியிலுள்ள ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கிருஷ்ணனுன்னி கூறியதாவது - தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்ட முதலமைச்சர் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆறடி கரும்பு மற்றும் ரூ. 1,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

erode

அதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 868 முழுநேர நியாய விலை கடைகளும், 319 பகுதிநேர கடைகளும் உள்ளன. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 7.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் ஜனவரி 3 முதல் 8 வரை வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பிற்காக தரமான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவுரைப்படி ஜனவரி 9 பொங்கல் பரிசு தொகுப்பு, அனைத்து நியாய விலைக் கடைகளில் தரப்படுகிறது.

pongal gift

அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பாதுகாப்பாக  பரிசுத்தொகை பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்