சேலத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்... அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது!

 
slm

சேலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் 70 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். 

சேலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி பேசியதாவது - இன்றைய தினம்  சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளை பராமரிக்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் நல சிறப்பு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, மக்களின் அன்றாட தேவைகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதால் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எளிதாக சென்று சேர ஒரு வாய்ப்பாக அமைகிறது, என தெரிவித்தார். 

slm

தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை உள்பட 70 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.

இந்த கூட்டத்தில் தாட்கோ தலைவர் மதிவாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு. ஜவஹர், இயக்குநர்  ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, சேலம் ஆட்சியர் கார்மேகம், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏடிஜிபி ஜெயராம், நாமக்கல் எம்பி சின்ராஜ், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா, சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு, மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபினவ், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.