பெருந்துறை முள்ளம்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணி துவக்கம்.. எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் துவங்கிவைத்தார்!

 
erode

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம்  முள்ளம்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் துவங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளம்பட்டி ஊராட்சி மலைப்பாளையம் பகுதியில் சாலைகள் சேதமடைந்ததால் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள், அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி இன்று துவங்கியது.

இதனையொட்டி மலையப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருந்துறை எம்எல்ஏவும்,  சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினருமான  எஸ். ஜெயக்குமார் கலந்துகொண்டு சாலை பணிகளை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு, பெருந்துறை ஒன்றிய சேர்மன் சாந்தி ஜெயராஜ், முள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி குழந்தைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் முன்னிலை வகித்தார்.

perundurai

இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை ஒன்றிய துணை சேர்மன் உமா மகேஸ்வரன்,  கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் பழனிசாமி, பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் ரொட்டி பழனிசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஓ. ஆர்.பழனிசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமேஸ்வரன், வார்டு உறுப்பினர் பத்மாவதி, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்