மணிகண்டம் அருகே 2 பைக்குள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் பலி!

 
accident

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 2 சிறுமிகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்த நாகமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி (35). இவர் இன்று காலை தனது அண்ணன் மகள்களை அந்த பகுதியில் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். நாகமங்கலம் பகுதியில் மதுரை - திருச்சி சாலையில் சென்றபோது பாலாஜியின் வாகனத்தின் மீது எதிரே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பாலாஜி, அவரது 2 அண்ணன் மகள்களும் படுகாயமடைந்தனர்.

trichy gh

இதேபோல், மற்றொரு வாகனத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் பாப்பனம்பட்டியை சேர்ந்த காளிமுத்து(35), கணேசன்(28) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி, காளிமுத்து ஆகியோர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.