தூத்துக்குடி அருகே காரில் குட்கா கடத்திய நபர் கைது... ரூ.84 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

 
gutka

தூத்துக்குடி அருகே காரில் குட்கா கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.84 ஆயிரம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் குளத்தூரில் இருந்து வேம்பார் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

tuti

இதனை அடுத்து, காரில் 627 பண்டல்களில் இருந்த ரூ.84 ஆயிரத்து 960 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா கடத்தல் தொடர்பாக மேட்டுபனையூரை சேர்ந்த ரமேஷ் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் விற்பனைக்காக குட்காவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.