ஈரோடு அருகே மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை!

 
dead

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சிஎஸ்ஐ காலனியை சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி மரகதம் (85). இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜீ இறந்து விட்டார். இதனை அடுத்து, மரகதம் தனது தம்பி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு குளியலறையில் வழுக்கி விழுந்ததில், மரகதத்துக்கு முதுகு தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் தரையில் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார்.

perundurai govt hospital

இந்த நிலையில், சம்பவத்தன்று மரகதத்தின் தம்பி மகன் அவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மரகதத்தை காணவில்லை. இதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள பொது கிணற்றில் மரகதம் இறந்த நிலையில் சடலமாக மிதந்தார்.

தகவலின் பேரில் வெள்ளோடு போலீசார், மரகதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மரகதம் உடல்நலக் குறைவால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு  ஏதும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.