நாட்றம்பள்ளி அருகே பாம்பு கடித்து அரசுப்பள்ளி ஆசிரியை பலி!

 
natrampalli

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பாம்பு கடித்து அரசுப்பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள தாசிரியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பத்மினி (48). இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பத்மினி குளிக்க சுடு தண்ணீர் வைப்பதற்காக வீட்டின் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்துள்ளார். அப்போது, விறகுக்கு அடியில் மறைந்திருந்த நல்ல பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக பத்மினியை கடித்துள்ளது. இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

natrampalli

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பத்மினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.