பரமத்திவேலூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!

 
 suicide

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசித்து வருபவர் ராஜாங்கம். இவரது மனைவி உமா தேவி( 50). இவர் ஏத்தாப்பூர் அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் உமாதேவி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

paramathi vellore

நீண்ட நேரமாகியும் அவர் கழிவறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்துச்சென்று பார்த்தபோது, உமாதேவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். தகவலின் பேரில், பரமத்திவேலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.