தருமபுரியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

 
protest

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பொது விநியோக திட்டத்திற்கான தனித் துறை அமைக்கவும், நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட 17 சதவீதம் அகவிலைப் படியை வழங்கிடவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

dharmapuri ttn

மேலும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிடுதல் உள்ளிட்ட 7 அசம் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி - சேலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.