குமாரபாளையத்தில் அரசுப்பேருந்து மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி!

 
accident

குமாரபாளையத்தில் நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் மீது அரசுப்பேருந்து மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி(50). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று  மஞ்சுபாளையம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செயவதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் - சேலம் சாலையில் பவர் ஹவுஸ் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நாய்கள் குறுக்கே ஓடிவந்ததால் நிலை தடுமாறி சாலை விழுந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சங்ககிரி நோக்கி சென்ற அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

dead body

தகவல் அறிந்து அங்கு வந்த குமாரபாளையம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அரசுப்பேருந்து ஓட்டுநர் சங்ககிரியை சார்ந்த சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கட்டுமான நிறுவன அதிகாரி பலியான சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.