ஈரோட்டில் அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

 
jjj

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன சேவை பாதிக்கப்பட்டதை கண்டித்து, ஈரோட்டில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் அருள்முருகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  பின்னர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க தலைவர் அருள்முருகன் பேசியதாவது, கடந்த 4 நாட்களாக அரசு கேபிள் டிவியில் ஒளிபரப்பு முற்றிலுமாக முடங்கியதால், அரசு வழங்கிய செட்டாப் பாக்ஸ் மூலம் சேவை பெறும் லட்சக்கணக்கான நுகர்வோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால், பலர் கோபமடைந்து எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், டிஷ் மற்றும் பிற ஆபரேட்டர்களின் சேவையைப் பெற பலர், எங்கள் நெட்வொர்க்கை விட்டு வெளியேறினர். 

cabe tv

எங்களது வாடிக்கையாளர்களின் முழு கட்டணம் மற்றும் சந்தாவை நாங்கள் நிறுவனத்திற்கு செலுத்தினோம். ஆனால், இடையூறு குறித்து விசாரித்தபோது, ​​அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில் இல்லை. பிரச்சனைக்கான சில தொழில்நுட்ப காரணங்களை அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், பிற ஆபரேட்டர்கள் மற்றும் டிஷ் ஆன்டெனா நிறுவனங்களை ஊக்குவித்து, கார்ப்பரேஷனை அழிக்கும் முயற்சியோ? என நாங்கள் சந்தேகிக்கிறோம். அரசின் ஆதரவின்மையால் பி.எஸ்.என்.எல் அழியும் தருவாயில் உள்ளது. அந்த நிலை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு வரக்கூடாது என விரும்புகிறோம். இந்த நிறுவனத்தில் 34 லட்சம் கேபிள் இணைப்புகள் இருந்த நிலையில், தற்போது 24 லட்சமாக குறைந்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் 456 ஆபரேட்டர்கள் உட்பட சுமார் 46 ஆயிரம் ஆபரேட்டர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த நிறுவனத்தை நம்பியிருக்கிறார்கள். எனவே, அரசு இந்த நிறுவனத்தை பாதுகாத்து பழைய செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக, அனைத்து சந்தாதாரர்களுக்கும், ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்க வேண்டும். தற்போது, ​​பல செட்டாப் பாக்ஸ்கள் பழுது ஏற்பட்டு செயல்படவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.