தென்காசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி போக்சோவில் கைது!

 
pocso

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பூக்கடையில் தொழிலாளி ஆக வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனை அறிந்து, இருவரது வீட்டினரும் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

arrested

இந்த நிலையில், இதுகுறித்து அப்பகுதிவாசிகள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு 18 வயது நிறைவடையாதது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிறுமியை திருமணம் செய்த பிரபாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.