விநாயகர் சதுர்த்தி விழா... கோவை மாவட்ட விநாயகர் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு!

 
vinayagar

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

vinayagar

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஆசியாவிலேயே மிக உயரமான புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், 19 அடி உயர விநாயகர் சிலைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 4 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் சிறப்பு பூஜையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர். இதேபோல், பிரசித்தி பெற்ற ஈச்சனாரி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலிலும் இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

vinayagar

கோவை ரத்தினபுரி நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு உள்ள  9 அடி உயர விநாயகர் சிலைக்கு, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளால் 3.25 லட்சம் ரூபாயக்கு பணமாலை அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், சிவானந்தா காலனி பகுதியில் பாரத் சேனா அமைப்பின் சார்பில் பாகுபலி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சிவ லிங்கத்தை தோளில் சுமந்த நிலையில் இருக்கும் விநாயகரை, பக்தர்கள் ஆர்வமுடன் வழிபட்டு வருகின்றனர்.