கந்த சஷ்டி விழா - சுவாமிமலை முருகனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்!

 
swamimalai

முருக பெருமானின் 4ஆம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில். முருக பெருமானின் 4ஆம் படைவீடான இந்த கோவிலில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி, சுவாமி காலை மாலை வேளைகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

swamimalai

இந்த நிலையில், இன்று சூரசம்ஹார நிகழ்ச்சியை ஒட்டி, மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராணை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.