மேற்படிப்பில் சேர முடியாத விரக்தியில் மாணவி தீக்குளித்து தற்கொலை... குமரி அருகே சோகம்!

 
fire accident

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மேற்படிப்பில் சேர்க்க பெற்றோர் மறுத்துவிட்டதால் பொறியியல் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மாங்காமலை பழங்குடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது இளைய மகள் மோனிஷா (21). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு தேர்வு எழுதி உள்ளார். தொடர்ந்து, தனது கல்லூரி தோழிகளுடன் சென்னையில் அழகுகலை படிப்பில் சேர்ந்து படிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது, தங்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லாததால் மேற்படிப்பில் சேர்க்க முடியாது தெரிவித்துள்ளனர். இதனால் மோனிஷா மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளர். 

kumari

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது  நேற்று இரவு வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த மோனிஷா உயிரிழந்தார். தகவல் அறிந்த பேச்சிப்பாறை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மோனிஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.