தென்காசி அருகே குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்வைத்த உணவு பாதுகாப்புத்துறையினர்!

 
tenkasi

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே உள்ள பண்பொழி பகுதியில் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அச்சன்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் பண்பொழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே செயல்பட்டு வரும் முருகன் என்பவருக்கு சொந்தமான கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

tenkasi ttn

 இதனை தொடர்ந்து, கடையில் இருந்த ஏராளமான குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த  அதிகாரிகள், பின்னர் கடையை பூட்டி சீல்வைத்தனர். மேலும், குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து, கடைகளுக்கு சீல்வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.