ஈரோட்டில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை... குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த 8 கி. இறைச்சிகள் அழிப்பு!

 
food safety

ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது

ஈரோடு கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் மற்றும் சுகாதார அலுவலர்கள் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது அந்த பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் இருந்த இறைச்சிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். மேலும், அங்கிருந்த இறைச்சிக் கூடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

food safty

இந்த ஆய்வின்போது, சில கடைகளில் இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில்  விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த 10 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து, அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர். தொடர்ந்து, இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பொதுமக்களுக்கு தரமான இறைச்சிகளை விற்பனை செய்யும்படி அறிவுரைகள் வழங்கினர். இதேபோல், ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.