ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

 
ramnad collector

வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், வைகை அணையில் இன்று 6.11.2022 நீர்மட்டம் காலை 6 மணி அளவில் 70.01 அடியை எட்டியதை தொடர்ந்து அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு வினாடிக்கு 2,320 என்ற வீதத்திலும் உள்ளது.

vaigai dam

எனவே, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றின் தண்ணீர் அதிகளவு வர உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது. மேலும், கால்நடைகளை அப்பகுதிக்கு விடாமல் பாதுகாப்புடன் இருந்திட வேண்டுமென, ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.