இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தருமபுரி மாவட்டத்தில் 12.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்!

 
dd

தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று ஆட்சியர் சாந்தி வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 36 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சாந்தி நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் வாக்காளர்கள் 12 லட்சத்து 36 ஆயிரத்து 506 பேர் உள்ளனர்.  இதில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 851 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 10 ஆயிரத்து 892 பெண் வாக்காளர்களும் 163 இதர வாக்காளர்களும் உள்ளனர். 

dd

தர்மபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு, 977 பெண் வாக்காளர்கள் சராசரியாக உள்ளனர் என ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். மேலும், இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 2023 தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள்து பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலம் என்றும் ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
 
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பழனிதேவி, தருமபுரி கோட்டாட்சியர் கீதாராணி, அரூர் கோட்டாட்சியர் (பொ) ராஜசேகரன், தருமபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.