தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

 
ERODE

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின்  மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சிறுத்தை செல்வன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, புதுக்கோட்டையில் தலித் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மனித மலத்தை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரட்டை குவளை முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ERD

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சலீம் பாஷா, செய்தி தொடர்பாளர் ஆனந்த், தொழிற்சங்க பொறுப்பாளர் கார்த்தி, இளம்புலிகள் செயலாளர் அலெக்ஸ், மாணவர் அணி செயலாளர் பிரபு, மாநகர துணை செயலாளர் கவுதமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர கொள்கை பரப்பு செயலாளர் பூபதி வள்ளுவன் நன்றி கூறினார்.