கடன் தொல்லையால் தந்தை, மகள் விஷம் குடித்து தற்கொலை... கரூரில் சோகம்!

 
karur

கரூரில் கடன் தொல்லயால் தனியார் பள்ளி ஆசிரியர், அவரது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் அமராவதி நகரை சேர்ந்தவர் முகமது பரீத்(45). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் பானு. இவர்களுக்கு 16 வயதில் ஜுகுனாச் என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், ஆசிரியர் முகமது பரீத், பொதுத்துறை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று தனது வீட்டினை கட்டியுள்ளார். ஆனால் கடனை சரிவர கட்ட முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த முகமது பரீத், தனது மனைவி, மகளுடன் சல்பர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

karur

மயங்கிய நிலையில் கிடந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது பரீத், சிறுமி ஜுகுனாச் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நஸ்ரின் பானுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில் தாந்தோன்றிமலை போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.