தேனி மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
paddy farm

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை ஆட்சியர்  முரளிதரன் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

theni collector

தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து பயன்பெறவும், மேலும், தங்களது குறைகளை மனுக்களாக குறைதீர் தின கூட்டத்தில் வழங்கிடலாம்.

விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது கண்காணித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.