அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
collector ariyalur

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி-2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.01.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

paddy farm

கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.