தென்காசி மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
tenkasi

தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 09.09.2022 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

paddy farm

அனைத்துத்துறை அலுவலர்களும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்துகொண்டு, விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார்.