அரியலூரில் வரும் 23ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
collector ariyalur

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு செப்டம்பர் - 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 23.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

paddy farm

இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டுமெனவும், சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.