கிருஷ்ணகிரி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி!

 
krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே கனமழையின்போது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள ஏனோசோனை ஊராட்சி கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாக்கப்பன். இவரது மகன் ஜெயபிரகாஷ் (48). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் ஜெயபிகாஷ், தனது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் கனமழை பெய்த நிலையில், ஜெயபிரகாஷ் மீது மின்னல் தாக்கியது.

lightning striking

இதில் பலத்த காயமடைந்த அவரை கிராம மக்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.