கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி... பெரம்பலூர் அருகே பரபரப்பு!

 
poison

பெரம்பலூர் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வெள்ளனுர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி கனகா(29). இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த விவகாரம் அண்ணாதுரைக்கு தெரியவந்ததால், அவர் கனகாவை கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளார்.

perambalur

இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகா, மணிகண்டன் ஆகியோர் வீட்டில் இருந்து மாயமாகினர். குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து, அண்ணாதுரை, மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, பெரம்பலுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கனகா, மணிகண்டனை தேடி வந்தனர். இந்த நிலையில், தங்களை போலீசார் தேடுவதை அறிந்து அச்சமடைந்த கனகாவும், மணிகண்டனும் நேற்று, அருமடல் பகுதியில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

தகவலின் பேரில் மருவத்துர் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.