அரூர் அருகே சாலையோரம் சிதறி கிடந்த போலி ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு!

 
harur

அரூர் அருகே சாலையோரம் சிதறி கிடந்த போலி ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டுக்கொண்டு எடுத்த பொதுமக்கள் அவை போலியானை என தெரிந்ததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கொளகம்பட்டி வனப்பகுதியில் சாலையோரம் காட்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே நேற்று காலை குழந்தைகள் விளையாட்டிற்காக பயன்படுத்தும் போலி ரூ.2000, ரூ.200, ரூ.100, ரூ.10 ரூபாய் நோட்டுகளை சிலர் சாலையில் வீசி சென்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் அதனை உண்மையான ரூபாய் நோட்டுகள் என நினைத்து போட்டிப் போட்டுக் கொண்டு சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.

fake currency

அவர்கள் நோட்டுகளை சேகரித்து பார்த்தபோது அவை குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகள் என தெரிய வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், அந்த நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு புறப்பட்டு சென்றனர். இதேபோல் அந்த வழியாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் உண்மையான ரூபாய் நோட்டுகள் என நினைத்து அவற்றை எடுத்துபார்த்து ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.