ஈரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சத்தில் விரிவாக்கப்பணிகள்; காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா துவங்கி வைத்தார்!

 
thiru

ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான விரிவாக்கப் பணிகளை காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா துவங்கி வைத்தார்.

ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ உபகரணங்கள் இருப்பு வைக்கும் அறைகள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற கூடுதல் கட்டிடங்கள் மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார். மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவங்கி வைத்தார்.

thirumgan

இந்த நிகழ்ச்சியில், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாநகர் காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம், துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மமக மாவட்ட தலைவர் சித்திக், மண்டல தலைவர் பழனிச்சாமி, மண்டல காங்கிரஸ் விஜயபாஸ்கர், சசிகுமார்,  இளைஞர் காங்கிரஸ் விஜயகண்ணா, செந்தூர் ராஜகோபால், தமுமுக பௌஜுல் ஹசன், மாவட்ட செயலாளர் முஹம்மது லரீப், பொருளாளர் சகுபர் அலி, சுல்தான் அலாவுதீன், சாகுல் ஹமீது, மாமன்ற உறுப்பினர் சபீரா பேகம் முத்து பாவா, மாநகராட்சி மாநகர நலஅலுவலர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், மருத்துவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.