கோவில்களில் சிறப்பு காவல் அதிகாரி பணியிடத்துக்கு, முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் - தேனி ஆட்சியர்!

தேனி மாவட்டத்தில் கோவில்களில் காலியாக உள்ள 6 சிறப்பு காவல் அதிகாரி பணியிடத்திற்கு, முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெயியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தேனி மாவட்ட காவல் கண்காணிப்புக்குட்பட்ட கோவில்களில் 6 சிறப்பு காவல் அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்புக்குட்பட்ட கோவில்களில் காலியாக உள்ள சிறப்புக்காவல் அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்றுடன் தேனி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து பயனடையுமாறும்,
மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04546 - 252185 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு, ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.