ஈரோடு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி... 16 அணிகள் பங்கேற்பு!

 
football

ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஈரோடு மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை, மாவட்ட கால்பந்து சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். லீக் முறையில் போட்டிகள் நடைபெறும் நிலையில், அரை இறுதி போட்டி இன்று மதியமும், அதனை தொடர்ந்து மாலை இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.

foot ball

இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, தொழிலதிபர் திருமலை கோப்பை மற்றும் பரிசுகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் தனபாலன், துணைத் தலைவர் பாலாஜி, பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா ஜஸ்டின் ப்ரூஸ் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.