ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கல்!

 
evr

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பஜார் கிளையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் பஜார் கிளையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஈரோடு மத்திய கூட்டுறவு கடன் சங்கங்கள் தலைவர் கிருஷ்ணன் , பஜார் கிளையின் தலைவர் பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கினார். 

bank

இந்த நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், மண்டல தலைவர் தண்டாயுதபாணி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா,அம்மன் மாதேஷ், மண்டல தலைவர் விஜயபாஸ்கர், குப்பண்ணா சந்துரு, டிட்டோ, சமூக ஊடக பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திண்டல் பாலாஜி, தம்பி கார்த்தி, 42-வது வார்டு கவுன்சிலர் மேனகா நடேசன், அரசு அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் பஜார் கிளை மேலாளர் வசந்தி ஏற்பாடு செய்தார்.