ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சி!

 
rescue operation

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, கொடுமுடி உள்ளிட்ட 5 இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில், காவிரி ஆற்றில் வெள்ள மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இன்று வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில்  ஈரோடு வருவாய் கோட்டாச்சியர் சதீஷ்குமார் முன்னிலையில் ஓத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையியை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவர்கள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தத்ரூபமாக செய்து காட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

rescue operation

இந்த ஒத்திகையின்போது, வெள்ளத்தில் சிக்கி, மரத்தில் ஏறிய இளைஞரை ரப்பர் படகில் சென்ற மீட்பு குழுவினர் பாதுகாப்பாக அழைத்து வருவதையும், அவரை மருத்துவர்கள் பரிசோதித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதையும் தத்ரூபமாக செய்து காட்டினார். மேலும், குடியிருப்பு பகுதியில் திடீரென வெள்ளம் புகுந்தால், அதில் சிக்கிக் கொள்பவர்களை எப்படி காப்பாற்றுவது என்று குறித்தும் தத்துவமாக செய்து காட்டினார். 

இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, பவானி கந்தன் பட்டறை, கொடுமுடி இலுப்பு தோப்பு, சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆறு ஆகிய இடங்களிலும் பேரிடர் மீட்பு ஒத்தகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் புளுகாண்டி, உதவி மாவட்ட அலுவலர் முருகேசன், நிலைய அலுவலர்கள் கோமதி குமாரசாமி நவீந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் கலர் கலந்து கொண்டனர்.