தக்கலை அருகே சாலை விபத்தில் பொறியாளர் உயிரிழப்பு!

 
accident

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த பொறியாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேள்ள கோடியூர் காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் அனுராஜ் (26). இவர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து, நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி அனுராஜ், நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காட்டாத்துறை பகுதியில் விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

thakalay

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி அனுராஜ் உயிரிழந்தார். இதனை அடுத்து, பெற்றோர் அவரது உடலை தானம் செய்ய முன்வந்தனர். பின்னர் அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டது. தொடர்ந்து, அவரது நேற்று மாலை காடுவெட்டி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நாளில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.