பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்வி விடுதிகளில் பகுதிநேர தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு!

 
dindigul

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் ( ஆண்கள் 13, பெண்கள் 14) பணியிடங்கள், மாதம் ரூ.3 ஆயிரம் என்ற தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இந்த பகுதிநேர தூய்மை பணியாளர் (ஆண், பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, ஆண்கள் முன்னுரிமை பிரிவில் பொது - 1, எஸ்சி - 1, எம்பிசி / டிஎன்சி - 1 என 3 இடங்களும், ஆண்கள் முன்னுரிமையற்றோர் பிரிவில் பொது - 3, பிசி (முஸ்லீம் அல்லாதோர்) - 3, பிசி (முஸ்லிம்) - 1, எஸ்சி(ஏ) - 1, எம்பிசி / டிஎன்சி - 2 என 10 இடங்களும், பெண்கள் முன்னுரிமை பிரிவில் பொது - 1, பிசி (முஸ்லிம் அல்லாதோர்) - 1, எம்பிசி / டிஎன்சி - 1 என 3 இடங்களும், பெண்கள் முன்னுரிமையற்றோர் பிரிவில் பொது - 4, பிசி (முஸ்லீம் அல்லாதோர்) - 3, எஸ்சி - 2 , எம்பிசி / டிஎன்சி - 2 என 10 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

jobs

இந்த பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2022 தேதிப்படி, எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 18 முதல் 35 வரை, பிசி, பிசி(முஸ்லிம்), எம்பிசி / டிஎன்சி பிரிவினர் 18 முதல் 32 வரை, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் பகுதிநேர  தூய்மை பணியாளர் (தொகுப்பூதியம்) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து, உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி 21.11.2022-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.