பள்ளிபாளையம் அருகே சரக்கு லாரி மோதி விவசாயி பலி... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
accident

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்ற விவசாயி மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள இலந்தகுட்டை ஊராட்சி வெப்படை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் இலந்தகுட்டை பகுதியில் சாலையை கடப்பதற்காக தனது  இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ராசாமியின் சாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

accident

அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பள்ளிபாளையம் போலிசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சாலையில் நின்றிருந்த ராமசாமி மீது சரக்கு வாகனம் மோதியது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது ச வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.