"மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை" - சேலம் ஆட்சியர் கார்மேகம் தகவல்!

 
collector

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதாக, ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு  ஆண்டிற்கு ஒரு முறை 1 முதல் 5 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.1,000, 6 முதல் 8 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.3,000, 9 முதல் 12 வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ பயின்று வருபவர்களுக்கு ரூ.4,000, இளங்கலை பயின்று வருபவர்களுக்கு ரூ.6,000, முதுகலை, பி.இ, எம்பிபிஎஸ் பயின்று வருபவர்களுக்கு ரூ.7,000 என்ற வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

salem

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், 9ஆம் வகுப்பு முதல் கல்வி பயில்பவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம்  ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை பெற https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 11இல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம், என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.