திருச்சியில் இந்தி திணிப்பை கண்டித்து திராவிடர் மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

 
trichy

திருச்சியில் மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய பல்கலைக் கழகங்களில் இந்தி மொழியை பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசு பணிக்கான தேர்வுகளில் ஆங்கிலத்தை ஒழித்து, இந்தி மொழியை முன்னிறுத்தும் பாஜக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.