வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்!

 
kanchi

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்ட நிலையில், மாவட்டத்தில் மொத்தம் 13,22,152 வாக்காளர்கள் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆர்த்தி நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,22,152. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,43,747, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,78,224, இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 181. 

voters

மேலும், 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு புதியதாக வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் 1 வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,394 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் விவரம். ஆலந்தூர் தொகுதியில் 1,88,755 ஆண்களும், 1,93,024 பெண்களும், 55 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,81,834 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீபெரும்புதுர் (தனி) தொகுதியில் 1,76,753 ஆண்களும், 1,86,754 பெண்களும், 61 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,63,568 வாக்காளர்கள் உள்ளனர்.  உத்திரமேரூர் தொகுதியில் 1,28,157 ஆண்களும், 1,37,825 பெண்களும், 46 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,66,028 வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் 1,50,082 ஆண்களும், 1,60,621 பெண்களும், 19 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,10,722 வாக்காளர்கள் உள்ளனர்.