"கோவை மாநகரில் பொது இடங்களில் விளம்பரம் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது" - மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவு!

 
poster

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் உள்ளிட்டவற்றில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது என்றும், மீறினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராடசி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்துர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், அரசுக் கட்டிடங்கள், சுவர்கள், தெரு விளக்கு கம்பங்கள், சாலை மையத்திட்டுகள், பாலங்கள் மற்றும் இயற்கை வளங்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

Image

மீறினால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனம் / விளம்பர நிறுவனம், தொழிற் சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிக்காக சுவரொட்டி வைப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.