ஈரோட்டில் மாவட்ட அளவிலான கபடி போட்டி துவக்கம்... பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 80 அணிகள் பங்கேற்பு!

 
kabadi

ஈரோடு பெருமாள்மலை பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் 80 அணிகளை சேர்ந்த வீரர் பங்கேற்று விளையாடினர்.

ஈரோடு பெருமாள்மலை பகுதியில் ரௌத்திரம் கபடி நண்பர்கள் மற்றும் ஏ.எஃப்.சி கபடி குழு நண்பர்கள் ஆகியோர் சார்பில் 3ஆம் ஆண்டு கபடி போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, சேலம், தேனி, திண்டுக்கல், ஊட்டி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 80 அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

kabadi

இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பிகே பழனிச்சாமி மற்றும் சோமேஸ்வரன், குமார், திலிப்குமார், மணிகண்டன், பாபு, பிரதீப், கிரேசி, அரிகரன், சரவணன், சுதாகர், தர்மராஜ், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் ஜீவகுமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தலைவர் சுரேஷ், செயலாளர் முகேஷ், பொருளாளர் வினோத் ஆகியோர் செய்து இருந்தனர்.