ஈரோட்டில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி... வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ ஜெயக்குமார்!

 
hand

ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு, பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஹேண்ட்பால் கழகம் சார்பில் 3-வது மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் விளையாட்டு விழா, ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதியாக ஆண்கள் பிரிவில் கொங்கு பொறியியல் கல்லூரி அணியும், பெண்கள் அணியில் வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் முதல் பரிசை தட்டிச் சென்றன.

handball

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஹேண்ட்பால் கழகத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ராகவேந்திரன் கந்தசாமி வரவேற்பு உரை ஆற்றினார். சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளருமான மக்கள் ஜி.ராஜன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு வெற்றிபெற்ற  அணிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, சென்னிமலை ஒன்றியம் முன்னாள் சேர்மன் துரைசாமி, ஓட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு, பணியம்பள்ளி ரவி, மயிலாடி மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ், இளைஞர் பாசறை ரவிக்குமார், வர்த்தக அணி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.