விருதுநகரில் சிறப்பு பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம் வரும் 9ஆம் தேதி முதல் தொடக்கம் - ஆட்சியர் மேகநாத ரெட்டி தகவல்!

 
virudhunagar

விருதுநகர் மாவட்டம் 2023 சிறப்பு பொங்கல் பரிசுப் பொருட்கள் வினியோகம் வரும் 9ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக, ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தைப்பொங்லுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1000/- ரொக்கப்பணம் அனைத்து நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்க தமிழக அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகம் வரும் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு அந்தந்த நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் தெரு வாரியாக சுழற்சி முறையில் (Staggering System) நாளொன்றுக்கு கிராம புறங்களில் 200 குடும்ப அட்டைகளுக்கும், நகர்புறங்களில் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளது. பரிசு பொருட்கள் வழங்குவதற்கு முன்னதாகவே அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுபொருட்கள் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. மேற்படி டோக்கன்களில்  பொங்கல் பரிசு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டேக்கன்கள் கடந்த 3ஆம் தேதி முதல் வரும் 8ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

pongal

மேலும், பொங்கல் 2023-ம் ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் பெறுவதில் புகார்கள் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04562 - 252397 என்ற எண்ணிற்கு அலுவலக வேலைநாளில், வேலை நேரத்தில் புகார்கள் அளிக்கலாம்

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் நெரிசலை தவிர்த்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்கு சென்று தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசு பொருட்களை பெற்று செல்லலாம் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.