திண்டுக்கல் மக்கள் குறைதீர் கூட்டம்: 44 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் தொழில் கடனுதவிகளை வழங்கிய ஆட்சியர்!

 
dgl

திண்டுக்கல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 44 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான தொழில் கடனுதவிகளை ஆட்சியர் விசாகன் வழங்கினார்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விசாகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டாறு மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 197 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்ட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள அனைத்து மனுக்களின் மீதும் உடனடியாக தீர்வு காணுமாறு, ஆட்சியர் விசாகன் அறிவுறுத்தினார்.

dg

இந்த கூட்டத்தில் கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கொடைக்கானல் பாச்சலூரை சேர்ந்த ஓருவருக்கு ரூ.56,660 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, குஜிலியம்பாறை வட்டத்தை சேர்ந்த 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71 ஆயிரம் மதிப்பிலான  இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரம், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கும், 4 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடனுதவிகள் என மொத்தம் 44 பயனாளிகளுக்கு ரூ.15.70 லட்சம் மதிப்பிலான தொழில் கடனுதவிகளை ஆட்சியர் விசாகன் வழங்கினார்.

dg

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியாங்கா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.