தருமபுரி மக்கள் குறைதீர் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு சாதனங்களை வழங்கிய ஆட்சியர் சாந்தி!

 
dd

தருமபுரியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு சாதனங்களையும், காதொலி கருவிகளையும் ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, பட்டா வேண்டுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 364 மனுக்கள் வரபெற்றன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கிய, மனுக்கள் மீது அரசின் விதிகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.

dd

தொடர்ந்து, பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தின் சார்பில்  83 பழங்குடியின இளைஞர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஓட்டுநர் பயிற்சியுடன் கூடிய உரிமத்தினையும், வருவாய் துறை சார்பில் பூமாண்டஅள்ளியில் 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நடத்தும் நியாயவிலைக்கடை, மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் தாசரஅள்ளி நியாய விலைக்கடை ஆகிய கடைகளில் பணிபுரிந்து வந்த 2 விற்பனையாளர்கள் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்ததை தொடர்ந்து, அவர்களது வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் 2 நபர்களுக்கு, ரூ.50 லட்சத்திற்கான காசோலைகளை ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

மேலும், தாட்கோ அலுவலகத்தின் சார்பில் 9 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.33,500/- மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின்  சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82,740/- மதிப்பிலான முடநீக்கு சாதனங்களையும், காதொலி கருவிகளையும் ஆட்சியர் சாந்தி வழங்கினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமுக பாதுகாப்பு திட்டம்) சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.